இந்த சிறுகதைத் தொகுப்பினை வாசிக்க நான் ஆரம்பித்தபோது முன்னுரையில் நீர் கட்ட ஆரம்பித்த விழித்திரை, தொகுப்பின் கடைசி கதையான கல்பனாவின் கடைசி ஐந்து புள்ளிக்கு வரும்வரை விலகவே இல்லை.
ஆனாலும் மனது கண்களை மீறி படித்தது.
ஒரு கதையை உணர்தல் என்பது எவ்வளவு பெரிய பேரனுபவம்! இந்தத் தொகுப்பை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இது லபிக்கிறது.
வலியை முறியடிக்க வலிக்குள்ளாகவே பயணித்து வலி மறக்க செய்யும் ஒரு வித மனோதத்துவ போதனை தொகுப்பில் நெடுக வருகிறது.
தீக்குள் விரலை வைத்து நந்தலாலாவை தீண்டும் இன்பம் கண்டவனின் பேரன்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.
உபதேசிகள் நம் மீது நிகழ்த்தும் வன்முறையினை நூலாசிரியர் சொல்லும் விதம் சுந்தரமாக இருக்கிறது.
" நாம் உணர்ந்த உண்மைகளையே உபதேசங்களாக நமக்குச் சொல்லப்படும் தருணங்கள் சாபம் மிக்கவை. மூளையெங்கும் கசப்பின் வீர்யம் பரவி தலை தெறிக்க ஆரம்பிக்கும். கசப்பின் துகளோ கீழிறங்கி உள் தொண்டைக்குள் சொட்டும். அது தெறித்த இடங்களில் தோல் தடிமனாகிப் பருத்து, தொண்டை கசந்து,குரல் சிதறும். வாயெங்கும், வயிறெங்கும், பூச்சி மருந்தின் வசம் குமட்டும்."
மின் விளக்கை போடுவதும் அணைப்பதும் போலத்தான் மனிதர்கள் போகித்துக் கொண்டிருகிறார்கள் . அதன் உள் மின்சாரத்தை ஒருவரும் உணர்வதில்லை என்றார் ஓசோ.
" ஒன்றை ஒன்று அவிக்காது , ஒன்றை ஒன்று வீழ்த்தாது , இரட்டை நாதஸ்வர இசை அருவியாய் பயணித்து சம கால சம்போகத்தின் போது அறையை நிறைக்கும் நறுமணம்" தம்பதிகள் இருவரும் ஒத்திசைவாய் ஒரு புள்ளியில் குவியும் போது மட்டுமே சாத்தியம் என்றும் அப்படி இல்லாத ஒரு கூடலில், " பலாத்காரத்தின் துர் நாற்றம் மட்டுமே உயிர்ப் பாதையில் வேட்டை நாயென விரைந்து செல்லும்" என்று வெகு அற்புதமாக ஒரு கதையில் குறிப்பிடுகிறார்.
உறவுகளையும் , சொந்தங்களையும் குழந்தைகளாக நாம் பார்த்தபோது வந்த உணர்வுகளை வெகு அழகாக சில வரிகள் ஞாபகபடுத்துகிறது.
" துள்ள துடிக்க மீன்களை அறுத்து சுடுசாம்பலில் புரட்டியவாறே பிள்ளகளுக்கு பாடம் சொல்லித்தரும் அம்மா"
" உள்ளங்கையளவு நார்தைகளும், நெல்லியளவு பூத்த அருநெல்லிகளும், பெரியம்மாவின் கன்னம் போல் செழித்த எலுமிச்சைகளும் "
" பர்மாவிலிருந்து வந்த பீங்கன் ஜாடிகளில் மணத்துக் கிடக்கும் புதுப் புளி"
" பச்சைப் பனைமட்டைக் கூம்புக்குள் , குவிந்து வரும் இளம் நுங்குகளை நிறுத்தி வைத்த இடத்தில் சுற்றி வரும் பனஞ் சாற்றின் மணம் ஞாபகப்படுத்தும் தாத்தாவின் பழைய புத்தக வாசனை"
" ஒருவரை ஒருவர் தவறிக் கூட தொட்டு விடாமலும் , மோகத் தீ அணைந்து விடாமலும் கவனமாக இருந்த அப்பாவும் பெரியம்மாவும்"
" ஒரு விலங்கின் தவிப்போடும் , பறவையின் பதற்றத்தோடும் , மூர்க்கங்களின் பின் நிறைந்த குழந்தைத் தனத்தோடும், நிதானத்தின் பின் இருக்கும் பசித்த ஒரு விலங்குத் தனத்தோடும் இருக்கும் அப்பா"
வெளியில் இருந்து கொண்டு , வெளி விஷயங்களை மட்டுமே போதிக்காமல் , உள் இறங்கி, உள் வாங்கி, ஒவ்வொருவரின் உள்ளேயும் போய் உட்கார்ந்து கொள்கிறார் இந்த நூலாசிரியர்.,
அம்மாவும்,அத்தையும், அப்பாவும், தாத்தாவும், அப்பத்தாவும், சிநேகிதியும் என்று சீதாராமையர் காம்பவுண்டில் இருந்து ஆரம்பிக்கும் இவரின் முதல் தொகுப்பே மிரளச் செய்கிறது.
நூலாசிரியர் பன் முகம் கொண்ட ஒரு கநோசியர் என்று கேள்விபடுகிறோம். இவரது பட்டிமன்றங்கள், அறிவொளி அனுபவங்கள், அரசியல் முகாம்கள், வங்கி தொழிற்சங்க அனுபவங்கள், கல்லூரி கலாட்டாக்கள், கலை இரவுகள், இலக்கிய வட்டம், இனியர் வட்டம், திரை அனுபவங்கள், குறும்பட அனுபவங்கள் என்று இவர் தொடர்ந்து தமிழுக்கு அணி செய்வார் என்று நம்புவோமாக.
அன்னைத்தமிழ் தன்னிடம் உள்ள வசீகர வார்த்தைகளை எல்லாம் இவருக்கு தாராளமாக அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறாள்.
உங்களின் அடுத்த தொகுப்பு எப்போது பாரதி கிருஷ்ண குமார்?

No comments:
Post a Comment